ரியாத் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், எழுத்துக் கூடத்தின் ஒருங்கிணைப்பாளரும், தேன்கூடு திரட்டியை தோற்றுவித்தவரும், முத்தமிழ்மன்றத்தின் நிர்வாகியுமான திரு. கல்யாண்(சாகரன்) அவர்கள் நேற்று மாரடைப்பால் மரணமடைந்து விட்டார். அவரது உடல் ஒபய்த் ஹாஸ்பிடலில் தற்சமயம் உள்ளது என்பதனை மிகவும் துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்!
முத்தமிழ்மன்றம் உருவாகக் காரணமாக இருந்த முக்கிய தூணை இழந்து தவிக்கிறோம். 1978ல் பிறந்தவர். 28 வயது முடிந்து இன்னும் 29கூட ஆகாதவர். இந்த வயது இறக்கும் வயதா???
இதுபோன்ற கொடுஞ்செயல்களைப் பார்க்கும்போது இறைவன் இருக்கின்றானா என்று கேட்கத் தோன்றுகிறது. மனைவி, மூன்று வயது குட்டிப் பாப்பா வர்ணிகா, அப்பா, அம்மா, தங்கை ஆகியோரைப் பிரித்து அவரை அழைத்துச் சென்ற காலனை நினைத்தால்... கோபமாக வருகிறது.
கல்யாணின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். கல்யாணின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைத் தொழுவோம்.
பிரிவால் வாடும்,
முத்தமிழ்மன்ற நண்பர்கள்.
தொடர்புடைய சுட்டிகள்:-
1.ரியாத் தமிழ்ச்சங்கம்
2.சந்திரமதி கந்தசாமி
3.துளசிகோபால்
4.நாமக்கல் சிபி
5.தமிழ்மணம்
6.சிந்தாநதி
7.முத்தமிழ்மன்றம்
கண்ணீர் அஞ்சலி!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
சகபதிவர் மற்றும் தமிழ் பற்றாளர் ஒருவரை நாம் இழந்துள்ளது மிக வருத்தமான நிகழ்வு.
அண்ணாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்
Post a Comment