சிங்கப்பூர் கவிதையிலிருந்து.... பட்டினத்தார்

1.
' ஓவர் ஸ்டேயில் இருந்த
வீரமுத்து மவன் பாண்டியனுக்கு ரோத்தான் அடி
பாளம் பாளமா இறங்கியிருக்குதாம்....
பய குளிக்கையில்கூட சட்டையைக் களட்டுறதில்லையாம்....
என்ன செய்ய என்னய்யனுக்கு அஞ்சு
போண்ணாச்சு கல்யாணம் காத்தி,
புள்ள பொறவு பாக்கணுமில்லே....
வயல்ல பம்பு செட்டு மாத்தணும்;
வீடு பழுதுபாக்கணும்
போனது லீவுக்குப் போனது
பொட்டையாப் போச்சு.
பத்து வெள்ளினாலும்
ஊர்ப் பணத்துல இருநூத்தம்பது.......
பயலையாவது பெருமாக் கோயில்ல
கூடுற பட்டணத்து பயலுவ மாதிரி
கம்பூட்டர் படிக்க வைக்கோணும்.


2.


ஆருடம் சொன்னவனை நம்பி
அனைத்தையும்
அடகு வைத்து இங்கு வந்து
சேர்ந்தவனுக்கு
ரோடில்
தார் போடும் வேலை....

**சிங்கப்பூர் தமிழன் ஒருவனைப் பற்றிய ஒரு கவிதை..........

3.

அன்றொரு நாள்
ஹாய் சொன்னவனுக்கு
கழுத்து நீட்டினாள்
...........................
...........................
இப்போதும் இவள்
தேடுவது
அன்றொரு நாள்
ஹாய் சொன்ன
அவனை.....

** சுஜாதா அவர்களின் கற்றதும் பெற்றதும் புத்தகத்திலிருந்து...........
_________________

நான்சென்ஸ் நாற்பது - மாதவன்

நான்சென்ஸ் ஆளாளுக்கு வித்தியாசப்படலாம். எனக்கு சில விசயங்கள் நான்சென்ஸ்ஸாகவே(Nonsense) படுவதுண்டு. குறுகிய நேரத்தில் நான்சென்ஸை நாற்பதாக பட்டியலிட முடிந்தது.’நான்சென்ஸ் நாற்பது’ என்பது ‘நா நா’வென எதுகை மோனையாக அமைந்ததால் நாற்பதோடு நிறுத்திக்கொள்கிறேன்.உங் களுக்கு நான்சென்ஸாக படுபவனவற்றை பின்னூட்டமாக விடுங்கள். நான்சென்ஸ் நாற்பது இப்படியாக…

1.sunday-க்கு பிறகு வரும் Monday
2.அலுவலக மீட்டிங்கில் இண்ட்ஸ்ரடிங்காக மூக்கு நோண்டிக் கொண்டிருக்கும் சக ஊழியன்
3.பெஞ்சு(சேர்) தேய்க்காத அரசு அதிகாரி
4.சிரிக்க வைக்காத குண்டு மனிதர்கள்
5.சமத்து குழந்தை
6.பிய்ந்து போன பழைய செருப்பும் கடிக்காத புதுசெருப்பும்
7.60 வயதில் ஜிலு ஜிலு அரை டவுசருடன் வாக்கிங் போகும் தாத்தா
8.சென்னைக்கு டிராபிஃக் சிக்னல்
9.பஸ் ஸ்டாப்பில் நிற்கும் மாநகரப்பேருந்து
10.குழியில்லாத சென்னை சாலைகள்
11.‘அவுட்சோர்சிங்’ மென்பொருள்துறை
12.ஜோக் அடித்து வலுக்கட்டாயமாக சிரிக்க வைக்கும் மேலதிகாரி
13.அரசியல் இல்லா அலுவலகம்
14.கொள்கையுள்ள அரசியல் கட்சி
15.சீரியல் பார்க்காத குடும்ப பெண்
16.ஏழைக்கு கல்வி
17.செக்ஸ் படம் பார்க்காத மாணவன்
18.கோவிலும் கோவில் பிச்சைக்காரனும்
19.சோறு உண்ணும் ஏழை
20.பெண் சுகம் காணாத துறவி
21.திருடாத பணிப்பெண்
22.சிக்கனாகமல்(chicken) இயற்கையாக சாகும் கோழி
23.தொப்பையில்லாத போலீஸ்
24.ISO 9001:2000 தரச்சான்று பெற்றிருக்கும் காவல்நிலையம்
25.NRI-இன் இந்திய கவலை
26.scehdule படி முடியும் பிராஜக்ட்
27.மூத்திரமோ, தண்ணீரோ தெளிக்கப்பட்டிருக்காத வெஸ்டர்ன் 28.
28.டாஸ்மாக்கில் டீ குடிக்கும் டாஸ்மாக் ஊழியன்
29.நாட்டை திருத்த நினைக்கும் சினிமாக்காரன் கனவு
30.இருமல் வராத கிழடு கட்டைகள்
31.சண்டைப்போடாத மனைவி
32.வீட்டுக்கு வந்த நண்பருடன் பேசாமல் டீவியில் லயித்திருப்பது
33.வீட்டுக்கு வந்திருப்போர் முன் சிறு குழந்தையை ‘அதைச் செய்’, ‘இதைச் செய்’ என்று வன்முறையில் ஆழ்த்துவது
34.சண்டையில்லா இலக்கியமும் கையில் துப்பட்ட சுற்றாத குட்டி ரேவதியும்
35.சினிமாவில்/டிவியில் நுழைய மாட்டேன் என்று அடம்பிடிக்கும் எழுத்தாளன்
36.எழுதியதை புத்தகமாக விற்கத்துணியாத ஏழை சோனகிரி எழுத்தாளன்
37.பெண்ணுரிமையைப் போற்றும் சினிமா கவிஞன்/எழுத்து வியாபாரி
38.ஆபிஸில் முத்தமிழ்மன்றம் படிக்காமல் வேலையில் லயித்திருப்பது
39.நான்சென்ஸை தொகுக்கும் நான்
40.மத்த பதிவுகளையெல்லாம் விட்டு விட்டு இந்த பதிவை படிப்பது

முத்தமிழ்மன்றம்

இதே போன்ற பதிவு