செல்வமுரளியும் நடிகை விந்தியாவும்!

முதன் முதலில் இங்கே எனது அனுபவங்களை பகிர்ந்துகொள்வதால் ஒரு கிளுகிளுப்பாக கவர்ச்சி நடிகை விந்தியா பற்றிய செய்தியை இங்கே நான் பகிர்ந்து கொள்கிறேன்.

நான் முதன்முதலில் சேர்ந்த அந்த தமிழ் செய்திதாளில் முதலில் யார் புதியதாக பணிக்கு சேர்ந்தாலும் அங்கே முதலில் செய்திகளைதான் அடிக்க வேண்டும். செய்திகளை வேகமாகவும், பிழையில்லாமல் அடித்தால் மட்டுமே அடுத்த கட்டமாக விளம்பரங்களை செய்ய அனுமதிக்கப் படுவார்கள். விளம்பர கட்டத்தை முடித்தவுடன்தான் பக்க வடிவமைப்புக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

எனது பத்திரிக்கை துறையின் அனுபவத்தில் பத்திரிக்கை துறையில் வரும் செய்திகள் மக்களை சென்றடையும் வேகம், மற்றும் அதில் ஏதேனும் ஒரு பிழை வந்தால் அது எத்தனை ப்ரச்னைகளை ஏற்படுத்தும் என்பதையும் அறிய முடிந்தது.

அன்று வழக்கம்போல் மாலை 6 மணிக்கு அலுவலகம் வந்தவுடன் அன்று வழக்கத்திற்கு மாறாக ஆபிஸ் சற்று வேகமாக இயங்குவதாக தோன்றியது. உள்ளே சென்றவுடன் தெரிந்தது. ஓசூரில் ஒரு ஷூட்டிங்கில் நடிகை விந்தியாவை யாரோ கற்பழிக்க முயன்றது தான் அந்த பரபரப்புக்கு காரணம் என்று தகவல்தான் வந்துள்ளது. இன்னும் விரிவாக நியூஸ் வரவில்லை என்பதால் சென்னை அலுவலகத்தில் இருந்து இங்கே கேள்வி மேல் கேள்வி.

ஒருவழியாக அந்த நியூஸ் பேக்ஸ் வழியாக அலுவலகத்திற்கு வந்தது. வந்தவுடன் எங்களுடைய சப்-எடிட்டர் என்னிடம் வந்து இந்த செய்தியை நீயே அடித்து டூ-ஆல் (எல்லா பதிப்புகளும் அனுப்பி விடுவது) அனுப்பிவிடு என்றார்.

நானும் செய்தியை அடித்துக் கொண்டிருக்கும்போதே எடிட்டர் என்னப்பா நியூஸ் அடிச்சாச்சா என்றார். நானும் அடித்துக் கொண்டிருகிறேன் என்றுவிட்டு இன்னும் வேகமாக அடித்து முடித்துவிட்டு ப்ரூப் செக்ஷனுக்கு சென்று கொடுத்து அவசர அவசமாக படித்து வாங்கிவந்து சப்-எடிட்டர் அவர்களிடம் கொடுத்தேன். அவரும் செய்தியை சற்று எடிட் செய்துவிட்டு அதற்கேற்றார்போல் மாற்றி அனுப்ப சொன்னார்.

நானும் செய்தியை மாற்றிவிட்டு உடனடியாக அனைத்து பதிப்புகளுக்கும் அனுப்பியாகிவிட்டது.

இரவு 12.30 மணிக்கு செய்திதாள் ஓடி வந்த பிறகு என்னுடைய எடிட்டர் என்னை அழைப்பதாக தகவல் வந்தது. அவருடைய அறைக்கு சென்றேன். அங்கே சென்றபிறகு அந்த செய்தியை படிக்கச்சொன்னார். அதில் இவ்வாறு இருந்தது.

நடிகை விந்தியாவை வாலிபர் கற்பழிக்க முயற்சி, நடிகை விந்தியா தங்கியிருந்த ஓட்டலில் பாரில் மருந்து அருந்திவிட்டு வந்த வாலிபர் கற்பழிக்க முயற்சி என்று இருந்தது.

எடிட்டர் " ஏன்யா எந்த ஊர்ல போய் பாரில் போய் மருந்து சாப்பிடுவாங்களா? இல்லை மது சாப்பிடுவரா என்று? எனக்கோ சிரிப்பு? அந்த செய்தியை படித்தபின் அந்த மாதிரி இருந்தது.

உடனே ப்ரூப்பில் இருந்து அந்த பேக்சை வாங்கி வந்தனர். அதில் மது அருந்து என்றுதான் இருந்தது. நான் ப்ரூப்பிற்கு அனுப்பியதிலும் சரியாகத்தான் இருந்தது. இதில் என்ன மாற்றம் எனில் செய்தியை சப்-எடிட்டர் மாற்றம் செய்ய சொன்னபோது அங்கே நான் மது அருந்தி என்று இருந்த்தை தவறுதலாக அந்த துஅ என்பதை எப்படியோ டெலிட் செய்துவிட்டிருந்தேன்.

உடனடியாக அனைத்து பதிப்புகளுக்கும் தகவல் அனுப்பப் பட்டது. ஆனால் மற்ற பதிப்பினரோ நடிகை விந்தியா தங்கியிந்த ஓட்டலில் பாரில் " மருந்து" அருந்திவிட்டு வந்த வாலிபர் கற்பழிக்க முயற்சி என்று இருந்தது. என்று பிழையில்லாமல் வெளியிட்டு விட்டனர். ஆனால் இங்கே எங்களுடைய பதிப்பில் அவசர அவசரமாக நிறுத்தி மெஷினை நிறுத்தி உடனடியாக மாற்றம் செய்த தகவலை வெளியிட்டோம்.

அந்த நேரத்தில் அப்பப்பா எனக்கோ வேர்த்து விறுவிறுத்து விட்டது. சேர்ந்து சில மாதங்கள் கூட இல்லை. என்னடா இப்படியாகி விட்டதே என்று. அதுதான் என் முதல் அனுபவம் பத்திரிக்கை துறையில்.

மீண்டும் சந்திக்கிறேன்.................

அன்புடன்
செல்வமுரளி