மலாக்காவை ஆண்டது தமிழ் மன்னனா?

மலாக்கா பற்றி விக்னேஸ்வரன் அடைக்கலம் என்பவர் எழுதி இருந்தார். அதனைப் படித்ததும் இந்த பதிவு.

மலேசியாவின் மலாக்காவை எந்த தமிழ் மன்னனும் ஆட்சி செய்யவில்லை! மலாக்காவை ஆண்ட பரமேஸ்வரன் இந்தோனேசியா சுமத்ரா தீவைச் சேர்ந்து இந்து. ஆனால் மலாய் மொழி பேசக்கூடியவர்.

மலாக்காவில் மட்டுமின்றி மலேசியாவிலேயே எந்த தமிழ் மன்னரும் ஆட்சி செய்யவில்லை என்பதுதான் உண்மை. ராஜராஜ சோழன் தமிழ்நாடு - சீனா வாணிகத்தில் ஈடுபட்டிருந்த தமிழக வணிகர்களின் நலன்களை காப்பாற்றுவதற்காக கடாரத்தைக் கைப்பற்றினான். அதனால் அவனுக்கு கடாரம் கொண்டான் என்ற பெயரும் உண்டு. அது இன்றுக்கு கெடா என்று அழைக்கப்படுகிறது.

லங்காவியில் இருந்து சிங்கப்பூர் வரைக்கும் உள்ள மலாக்கா நீரிணையை காக்கும் பொறுப்பினை ராஜராஜ சோழனின் ஆட்கள் பார்த்துக் கொண்டனர். அவனுடைய படைவீரர்கள் மலேசியாவின் கடலோரத்தில் பல இடங்களில் முகாம் இட்டிருந்தனர்!

கடாரம் கொண்ட ராஜராஜ சோழன் மலேசியாவில் இருந்த மலாய் அரசர்களுக்கு என்னென்ன உதவிகள் செய்தான் என்பதை கவிச்சுடர் காரைக்கிழார் அவர்கள் சொல்லோவியத்தில் எழுதி உள்ளார்.

பரமேஸ்வரன் முதலில் சுமத்ரா தீவில் இருந்து தெமாசெக் என்று அழைக்கப்படும் சிங்கப்பூருக்கு வருகிறான். அவனை மெஜாபாகிட் தாக்குதல்காரர்கள் விடாமல் துரத்துகின்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்து தன் ஆதரவாளர்களோடு செலத்தார் நதி வழியாக மூவார் வருகிறான். தொடர்ந்து வடக்கே நகர்ந்து 1402ம் ஆண்டில் மலாக்காவில் தன் அரசை நிறுவுகிறான்.

பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மலாக்கா முக்கியத்துவமற்ற மீனவர் கிராமமாகத்தான் இருந்தது. மக்கள் தொகையும் அதிகமில்லல. தெமாசெக், மூவார், சுங்கை உஜோங் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுடன் ஓராங் லவுட் என்ற கடல் நாடோடிகள் மட்டுமே அங்கு வசித்தனர்! மன்னன் பரமேஸ்வரன் பாசாய் இளவரசியை மணந்து முஸ்லிமாக மாறுகிறான். அதன்பிறகு அவன் பெயர் இஸ்கந்தர் ஷா என்று மாறுகிறது!

இஸ்கந்தர் ஷாவைத் தொடர்ந்து அவருடைய புதல்வர் மெகாட் இஸ்கந்தர்ஷா அரியணை ஏறுகிறார். அவர் 10 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.

மலாக்காவின் மூன்றாவது மன்னர் ராஜா தெங்கா என்கிற ராடின் தெங்கா. இவர் இஸ்லாத்தை தழுவி தமிழ் முஸ்லிம் பெண்ணை மணந்து பின் முகம்மது ஷா என்று பெயர் மாறுகிறார்.

இவரின் மரணத்தைத் தொடர்ந்து ரோகான் இளவரசியின் மகனான ராஜா இப்ராஹிம் பட்டத்துக்கு வருகிறார். ஆனால் அப்போது பாரம்பரிய மலாய் இந்துக்களுக்கும் வளர்ந்து வந்த தமிழ் முஸ்லிம் சமுதாயத்துக்கும் இடையில் பெரும் நெருக்கடி நிலவியதால் முஸ்லிமாக மாறுவதற்கு மறுத்து ஸ்ரீ பரமேஸ்வர தேவாஷா என்கிற பெயருடன் ஆட்சி புரிந்த ராஜா இப்ராஹிம் அரியணை அமர்ந்த 17வது மாதத்தில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

இவருடைய ஒன்றுவிட்ட சகோதரரான தமிழ் முஸ்லிம் தாய்க்குப் பிறந்த ராஜா காசிம், சுல்தான் முஸாஃபர் ஷா என்ற பெயருடன் அடுத்து பட்டத்துக்கு வருகிறார். மலாக்கா சாம்ராஜ்யத்தின் பொற்காலம் அப்போதுதான் ஆரம்பத்துக்கு வருகிறது!

7 comments:

said...

கவிஞர் சுரதாவுக்கு ஒரு புதுமையான பழக்கம் இருந்துள்ளதாம்; தான் செல்லும் நாடுகளின் மண் சேர்ப்பது. அவரே கூறியிருந்தார். மலாயா சென்ற போது; சோழமன்னர் ஆண்ட மண்ணேன ஒரு இடத்து மண்ணையும் தான் சேர்த்துள்ளதாக...தங்கள் செய்தியும் சுவையாக உள்ளது

said...

கலக்கிட்டீங்க! சுவையான தகவல்கள். ஆம், பரமேஸ்வரா தமிழர் இல்லை, இந்து அரசர்தான்.

இன்றும், இந்தோனேசியாவில் நிறைய பெயர்கள் இந்தியப் பெயர்கள் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

நான் ஒருமுறை, சிங்கப்பூரிலிருந்து பிந்தான் தீவுக்குப் போனபோது, அந்தப் பெரிய படகின் பெயர் 'இந்திர பூபாலா'!!

said...

unggal karuthukku nandri... naan parameswaraavai tamilan endru kuripida villai...

said...

நன்றி வினேஸ்வரன். சிங்கப்பூர் வரலாறும் எழுதுகிறேன்.

நான் போட்ட பின்னூட்டத்தினை அழுத்து விட்டீர்கள் போலிருக்கிறதே? காணவில்லையே பதிவில்?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
said...

முத்தமிழ் (உங்கள் பெயரைக் கேட்டவுடன் எனக்கு நினைவிற்கு வரும் பாடல் "நீ முத்தமொன்று கொடுத்தால் முத்தமிழ்") நண்பரே, நீங்கள் விக்னேஷ்வரன் அவர்கள் எழுதிய பதிவை நன்கு படியுங்கள் அவர் பேரரசர் பரமேஸ்வரா தமிழ் ஆள் என்று குறிப்பிடவே இல்லை. மேலும் பின்னூட்ட மொன்றில் பேரரசர் பரமேஸ்வரா தமிழ் பேசுபவர் அல்ல என்றே குறிப்பிட்டுள்ளார்.

said...

//மலேசியாவின் மலாக்காவை எந்த தமிழ் மன்னனும் ஆட்சி செய்யவில்லை! மலாக்காவை ஆண்ட பரமேஸ்வரன் இந்தோனேசியா சுமத்ரா தீவைச் சேர்ந்து இந்து. ஆனால் மலாய் மொழி பேசக்கூடியவர்.//

முன்னாள் மலேசிய பிரதமர் பெயர் மகாதீர் ஒரு முஸ்லிம். அதே போன்று இந்தோனிசிய பெண் அதிபர் பெயர் மேகவதி சுகர்னோ புத்திரி. இது போன்று இந்திய பெயர்கள் பவுத்தம் அங்கெல்லாம் பரவிய போது அங்கே சென்றது. இந்து பெயர்களெல்லாம் சமஸ்கிரத பெயர்போல ஒரு கருத்து நிலவி வருவதும் தவறான தகவல். பெளத்தர்/ சமணர்களின் பாலி மொழிக்கும் சமஸ்கிரதத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இரு மொழிகளில் பொதுவாக புழங்கும் பெயர்கள் பல உள்ளன. எனவே அங்கு ஆண்டவர்கள் இந்து மன்னர்கள் எனபதும், அவை சமஸ்கிரத பெயர் என்பதும் தவறான தகவல்கள். தாய்லாந்து வரலாற்றில் ராமர் 1, ராமர் 2, ராமர் 3 என்று பலராமர்கள் ஆட்சி நடத்தி இருக்கிறார்கள் இவர்களில் ஒருவரும் இந்தியர் இல்லை. சந்தேகம் இருந்தால் விக்கிபீடியாவை பாருங்கள்.