பாரம்பரிய இசையின் தாக்கம் - டாக்டர் பெருமாள்

பாரம்பர்ய இசையின் தாக்கம் பற்றியமேலைத்தேய இசையின் ஊடுருவல் அதிகரித்து வரும் இன்றையச் சூழலில்இளைய சமூகத்தை பாரம்பர்யத்தின் பக்கம் திருப்பம் கண்டிப்பாக முடியும் அதற்க்கு உதாரனம் தான் இன்றைய ரீமேக் பாடல்கள்.

மற்றும் கர்னாடக சங்கீதங்கள் காலத்தால் அழியாது இசையை நாம் உருவாக்கவில்லை ஒம் என்ற பிரனவ நாதத்தில் இருந்தும் இறைவனாலே உருவானதே பாரம்மர்ய இசை இதை யாராலும் அழிக்க முடியாது

தற்ப்போது இளைங்கர்களின் பார்வையும் பாரம்பரிய இசையில் தான் புது இசையில் அவர்கலுக்கு தலை வலிதான் மிச்சம் சூட்சும ராகம் சரியாக அமைக்காமல் வாத்திய கருவிகளை டமால் டாமால் என்று அதிக சப்த்த்தோடு அடித்து உடல் ஆரோக்கியம் தான் கெடுகிறது, ஆனால் நமது பாரம்பரிய இசை கருவிகளோ அப்படி இல்லை மனதிற்க்கு நெருடுகிறதாகவும் உடல் நோய்களை குனப்படுத்துவதாகவும் அமைகிறது.

இதை இன்றைய சூழல்களிம் நாம் கானலாம் நம் இந்திய நாட்டு ஆதிகால சங்கீத வாத்தியங்கள் மூன்றினுள்ளும் முதன்முதலாக அனைத்து வகையான பொது மக்களிடையே நாட்டில்.. வாத்தியம் என்ற பெயரில் அறிமுகம் ஆகியது நாகசுர வாத்தியமே. அனைத்து வாத்தியங்களிலும் மங்கள-வாத்தியம் என்ற தனிச்சிறப்பு பெற்றதோடு மட்டுமின்றி... சுப-நிகழ்ச்சிகளுக்கு இன்றியமையாதாகிவிட்டது நாகசுரம் ஒன்றே மனிதன் இரவில் கொண்ட நல்ல உறக்கம் வைகறை வேளையில் கலைகிறது... அதாவது கலைக்கப்படுகிறது சுற்றுச்சூழல் இயற்கை தன்மையால்... எப்படி.?

ஆனைச்சாத்தன் போன்ற விடியும் வேளையில் பாடும் பறவைகளின் மெல்லிய இனிய ஒலி... அருகிலுள்ள பூஞ்சோலையினின்று எழும் வண்டுகளின் ரீங்காரம் கோழி கூவல் பிற பறவைகளின் சலசலப்பு... போன்ற மென்மையான ஒலிவகைகள் நமது அரை தூக்க நிலையில் காதில் விழுகின்றன மேலும் அருணோதய வேளை காற்று தனித்தன்மை வாய்ந்ததால், மெல்லிய குளிர் கலந்த மென்-வெம்மை புத்துணர்ச்சியை உடலில் ஏற்படுத்துகிறது. பல்வகை பூக்களின் நறுமணம் காற்றோடு கலந்து வந்து, நம் நாசியை துளைக்கிறது... தொழுவத்தில் கன்றின் குரலுக்கு மறு-மொழியாக தாய்-பசு அம்மா என்று கத்துவது நம் காதில் விழுந்தவுடனேயே அரை-தூக்கத்திலும் கூட, நமக்கு பால்-நினைவு வந்து எச்சில் ஊறுகிறது. இவை தவிர, விடிந்தும் விடியாத அந்த வைகறை வெளிச்சம் நம் கண்ணை துளைக்கிறது. இங்ஙனம் நமது ஐம்புலன்களும் தூண்டப்பெறுகின்றன..

நாம் உறங்கி எழும் முன்னமேயே. இயற்கையின் நாள்-துவக்க தூண்டல்கள் யாவும் நமது ஐம்புலன் உணர்ச்சிகளையும் எழுப்பி, உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் அந்நிலையில் சுற்றுச்சூழலில் இரவின் அமைதி மென்மையாக கலையும் புதுமையான முதல்-நினைவு நம் மனதில் ஓர் ஒப்புயர்வில்லா சாந்தி-உணர்வையும் ஏற்படுத்துகிறது.

அத்தகைய சுற்றுச்சூழல் புறச்-சாந்தி உணர்வை காட்டும் ராகம் பூபாளம் மேலும் உறக்கம் விட்டு எழுந்து பணிக்-கடமைகளை-ஆற்ற தேவையான சாந்தி மனத்தோடு, துவக்க எழுச்சி-உணர்வை நம்முள் ஏற்படுத்தும் ராகம். ஆனால் மனிதனின் இயல்பு மனக்-குதிரையால் பல்வகை சிந்தனை ஓட்டம்... எனவே புறச்சாந்தி உணர்வோடு வேறு ஏதாவது ஒரு உணர்வையும் கலந்து நினைக்கிறான். அத்தகைய பல்வகை உணர்வுகளோடு கலந்த அமைதி பக்தியோடு புறச்சாந்தி-உணர்வு காட்டும் பாடல்களை காணலாம்

http://www.musicindiaonline.com/p/x/PUx2HaPgy9.As1NMvHdW/

கேள்வி-ஞான மேதையான ஓர் நாடக நடிகருக்கு அக்காலத்தைய முது-பெரும் மகா வித்துவான்களே விசிறிகளாகி... அவரது பாட்டை கேட்கவே அடிக்கடி நாடக-கொட்டகைக்கு வந்து கேட்டு பாராட்டினார்கள் என்றால்... கேள்வி-ஞானத்தின் வல்லமையை அறியலாம் அன்றோ?

மானிட உருவில் ஸ்ரீ ராமபிரானே ஓங்கார நாதத்தின் அவதாரம். காண்போரை பிரமிக்கச்செய்யும் வகையில் தலை-சிறந்த கோதண்டம் என்னும் ராமபிரானின் வில்லின் வடிவே... மிடுக்குடனும் ஆழ்ந்த கம்பீரத்துடனும் துள்ளிப்-பாயும் ராகங்கள்.சப்த-ஸ்வரங்கள் எனப்படும் ஏழு சுரங்கள் தான்... அந்த கோதண்ட வில்லின் இனிமை வாய்ந்த சுண்டு-ஒலி நாத வகைகள்.ராகம் பாடுதலின் மூன்று வகை நுட்பங்களான.. கணம், நயம், தேஸ்யம் எனப்படுபவையே வில்-நாணின் மூன்று முறுக்கு-கம்பிகளான அதன் அங்கங்கள். நுட்பம் மிகு தாளங்கள் தான் பலப்பல மலர்-கணைகள்... நாணின் வலிமையால் அவை செலுத்தப்படும்போது அவை பிழிந்தெடுத்த பழ-ரசமாய் ராக நுணுக்கங்களின் விளக்கங்களோடு சீறி பாய்கின்றன [அதன் விளைவாய் அவை நமது ஆழ்மனதினுள் பேரின்பத்தை பதித்து விடுகின்றன]

அம்பு எய்த-பின் வில்லிலிருந்து எழும் ஒலி-வகைகளே...வில்லின் இனிமை மிக்க மெல்லிய பேச்சு-குரல்களான சங்கதிகள்.

http://www.musicindiaonline.com/p/x/HqO0YDiO1d.As1NMvHdW/

அவை அந்தந்த கட்டம் / சந்தர்ப்பத்திற்கு பொருத்தமானவை.ஆக ஓங்காரமே நமது ஆழ்மனத்தை நோக்கி நாத மலர்க்-கணைகளை செலுத்தி நம்மை பேரின்பத்தில் ஆழ்த்துகிறது என்பது கருத்துஇயற்கையுடன் இணைந்து மனித உள்ளங்களை வசியப்படுத்தி இசைய வைக்கும் ஒப்பற்ற பேராற்றல் கொண்டது இசை.

இசை ஒன்றே இசைப்பவருக்கும் கேட்பவருக்கும் இன்பமூட்டும் எழில்மிகு கலையாகும். ஆயகலைகள் அறுபத்து நான்கினுள் இசைக்கலையும் ஒன்று. உலகில் இசைக்கு நிகரானது இசை ஒன்றேயாகும்.

தாயவளின் நாவின் அசைவில் எழுந்திடும் ஒலியை தாலாட்டு என்றனர். தாலாட்டு என்பதன் பொருள் தால் - ஆட்டு என்பதாகும். தால் என்றால் நாவு. நாவின் அசைவில் பிறக்கும் இசையே தாலாட்டு ஆகும். இவ்வுலகில் மனிதப் பண்பாட்டின் பிறப்பிடம் முல்லை நிலமாகும். ஆய்ச்சியர் குரவைப் பகுதியில் ஆயர் மகளிர் பாடிய “முல்லைத் தீம்பாணி’ தான் உலகிலேயே முதலில் தோன்றிய இசைவடிவம் என்பர் நுண்கலை ஆய்வர்கள். ஆக இசையின் பிறப்பிடம் முல்லை நிலமாகும். நுண்கலையாகிய இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம், கட்டடம் எனும் ஐந்தினுள் தலையானது இசைக்கலையாகும். இசை பிறந்தது எங்கே? காற்றினிலே என்பதுதான் உண்மை. கானகத்தில் வண்டுகள் மூங்கிலைத் துளைபோடக் காற்றுத் துளை பின் உள்ளே புகுந்து வெளிவர, அது தருகிற ஓசையை ரசித்து மகிழ்ந்தபோதுதான் மனிதன் குழலைப் படைக்க அறியலானான்.

இசை, அசையாப் பொருளையும் அசைக்கும் வல்லமை கொண்டது. இதற்கு சாட்சி ராமாயணம். இசைத்தவன் ராவணன். இசை சாம கானம். இசையின் சீரிய சிறப்பை அறிந்திருந்த காரணத்தால் அகத்திய மாமுனி “”அகத்தியம்” எனும் முத்தமிழ் இலக்கணம் விளக்கும் ஓர் அரிய நூலைப் படைத்தார்.

வென்றிடுவேன் எந்த நாட்டையும் நாதத்தால்" ... திருவாளர் டி.எம்.சௌந்தரராஜனும், சீர்காழி கோவிந்தராஜனும் இணைந்து ஒரு போட்டிப்-பாட்டாகப் பாடுவதைக் கேளுங்கள்.

http://www.musicindiaonline.com/p/x/TJbg1.736d.As1NMvHdW/

இத்தகைய அரிய மொழி-வாய்ப்பும் நிறை-வளமையும் கொண்டதால் தமிழ்மொழியை வண்டமிழ் எனப் போற்றத்தக்க சீர்மையைக் காட்டுகிறது அன்றோ?.

http://www.musicindiaonline.com/p/x/RqOgiENFk9.As1NMvHdW/
http://www.musicindiaonline.com/p/x/qUygIon4yS.As1NMvHdW/
http://www.musicindiaonline.com/p/x/mqpgAA9-69.As1NMvHdW/

மற்ற இசைகலை திரைக்கூத்து - முத்தமிழ் இசையில் கேட்டு மகிழுங்கள்.

இசை மனதுக்கு மட்டுமன்றி உடல் நோய்களைத் தீர்க்கும் வல்லமையும் கொண்டது. வராளி பாடிட வாதம் நீங்கும். காம்போதி பாடிட துன்பம் போகும். நீலாம்பரி, யதுகுலகாம்போதி ஊக்கம் தரும். தேஷ் ராகம் மகிழ்வூட்டும். வைகறைப் பொழுது பாடுவது பூபாளம். நாட்டை, ஆரபி ராகங்கள் கடவுளை வணங்கவும் நற்காரியம் புரியும்போதும் பாடப்படுவது. இறைவனிடம் வேண்டும்போது தன்னியாசி ராகம் சிறந்தது. இறைவனின் புகழ்பாட மோகனம், மன்னனிடமோ, இறைவனிடமோ யாசிக்கும்போது வராளி பாடலாம். மனத்தில் துன்பங்கள் நீங்க இறைவனிடம் கேதாரகௌளை பாடலாம். மனத்தை ஒருமுகப்படுத்த பூர்விகல்யாணி - செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்க சகானாஸ இப்படி ஒவ்வொரு ராகமும் ஒரு குணம் கொண்டது.

நாகசுரம் எனும் உயரிய இசைக்கருவி ஓர் உன்னதமான மங்களகரமான இசைக்கருவி. இதை நானசின்னம், நாகசின்னம், நாதசுரம் என்றும் அழைப்பர்.

நாகசுரத்திற்குரிய சீவாளி எனப்படும் சிறிய பொருளே இனிய இசையை நாயனத்தின் செவி குளிரத் தருகிறது. இந்தச் சீவாளி கொரத்தட்டை எனப்படும் ஒருவகைக் கோரையால் செய்யப்படுகிறது. இந்தச் சீவாளி அடைபடும்போது அதைச் சுத்தப்படுத்த உதவும் குச்சி யானைத் தந்தத்தால் செய்யப்படுகிறது.

ஆலயங்களில் நித்தமும் அதிகாலையில் பூபாளம் இசைத்து இறைவனை எழுப்புவர். மதியம் சுருட்டி எனும் ராகமும், இரவு கானடா, சகானா எனும் ராகங்களும் இசைக்கப் பெறும். உற்சவர் ஊர்வலத்தின்போது வசந்தா எனும் ராகமும் அனைத்து பூசைகளும் முடிந்து பள்ளி அறைக்குச் செல்லும்போது ஆனந்தபைரவி, நீலாம்பரி எனும் ராகங்களும் இசைக்கப்படும்.

இல்லறத்தில் ஈடுபடும் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ அடியெடுத்து வைக்கும் மன்றல் விழாவின் போது நாட்டைக்குறிஞ்சி ராகம் மிதந்திட கெட்டிமேளம் முழங்கப்படும். சரிகமபதநி என்ற எழு சுரங்களும் தமிழ் மொழியிலே வழங்கப்பட்டு வந்தன. நம்முடைய ஆன்மாவின் மூச்சு இசை. மனிதன் பிறந்தவுடன் இசை வயப்படுகிறான். “”தாயின் அன்பில் பண்பில் வருவதும் பாட்டு - வாழ்வில் களிப்பூட்டுவது பாட்டு - துயரத்தை நீக்கப் பாட்டு - களைப்பைப் போக்கப் பாட்டு - அன்பின் வெளிப்பாடு பாட்டு, மணவறையிலும் பாட்டு, மாண்டபின்னரும் பாட்டு” ஆக மனிதன் பிறப்புதொட்டு இறப்பு வரை பாட்டால் வாழ்கிறான். இசை மனித மொழியில் பிறந்து உணர்வில் கலந்து வருவதாகும்.

இசை சமுதாயச் சிந்தனையையும் தருகிறது. இசை ஒரு தெய்வீகம் என்பர். மனித உலகு இசைபட வாழ்தல் வேண்டும். இசையால் இவ்வுலகு மேம்பட வேண்டும். ஒரு சிறுவன் தன் தாயைக்கேட்டான்..."ஏம்மா ... என்னை உறங்கச்-செய்ய தாலாட்டுப்-பாட்டுப் பாடுகிறாய் ... கோயிலில் சாமி கும்பிடும்போதும், வீட்டில் பூசை செய்யும்போதும் பக்திப்-பாட்டுப் பாடுகிறாய்... நெல்-குத்துவது, துணி-துவைப்பது, வயலில் வேலை-செய்யும் நேரங்களிலும் பாடுகிறாய் ... பொங்கல், தீபாவளி, கல்யாணம் போன்ற மங்கள-நிகழ்ச்சிகளிலும் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டங்களிலும் பாட்டுத்தான்.

இவை தவிர ஊஞ்சல், கும்மி, கோலாட்டம் போன்ற பாட்டுக்கள் வேறு... போதாதற்கு யாராவது இறந்துவிட்டாலோ அப்போதும் வேறுவகையான பாட்டு பிலாக்கணம் மேலும் சவ-ஊர்வலத்தின் முன்னேயும் மணியடித்துச் சங்கு ஊதிக்கொண்டே வள்ளுவன் பாட்டு.

அதே போல, அப்பா வண்டி ஓட்டும்போதும், வயலில் நீர்-பாய்ச்ச மாடுகளை ஓட்டிக் கமலை-இறைக்கும் போதும், வேறு வேலைகள் செய்யும்போதும் பாடிக்கொண்டே செய்கிறார்.... மீனவர்களும் படகோட்டிகளும் ஐலசா- பாட்டோ அல்லது அது போன்ற கூட்டுப்-பாடலோ(Chorus) பாடிக்கொண்டே நீரில் பயணிக்கின்றனர் .... பெரும்-பாரம் ஏற்றி-இறக்கும்போதும், காட்டில் மரம் வெட்டி இழுத்துச் செல்லும்போதும் பாடிக்கொண்டே செய்கின்றனர்.

ஊர்விட்டு ஊருக்குக் கூட்டமாக நடக்கும்போதும் எல்லோரும் கூட்டுக்-குரலில் பாடிக்கொண்டே செல்கின்றனர்.... கோயிலில் அன்றாட-நிகழ்ச்சியாகவும், சாமி ஊர்வலத்தின்போதும் நாயனம் என்னும் நாகசுர-வாத்தியம் வாசிக்கின்றனர் ... இவை தவிர கேளிக்கை எனும் பெயரிலே மேடைக்கச்சேரி, நாடகம், சினிமாவிலும் பாட்டு, சங்கீதம் தான்.

இப்படி எங்கும் பாட்டு, எதிலும் பாட்டு, எப்போதும் பாட்டு மயமாகவே வாழ்வது ஏன் அம்மா ஆமாம் மேலும் சிலவற்றையும் கூறவிட்டுவிட்டாயே பொது-நிகழ்ச்சிகளின் துவக்கத்தில் அஞ்சலி என்ற பெயரிலும் பாட்டு, நாட்டின் தேசீய-கீதம், போர்-வீரர்களுக்கு மார்ச்-பாஸ்ட்-கீதம், போர்-முரசு-கீத-வகைகள் போன்றவற்றிலும் பாட்டுக்கள், இசை-மயம் தான்." என்று கூறி விளக்கினாள் தாய்.

ஏனெனில்... அதன் காரணங்கள் :

தாலாட்டு :-- சங்கீதத்திற்கே ஓர் ஈர்ப்பு-சக்தி உண்டு... அதனால் தான் மிருகங்களும் மட்டுமின்றி விஷப்-பாம்பும் கூட வசியப்படுகிறது என்று முன்னமேயே கண்டோம்... எனவே தாலாட்டின் இசையில் மயங்கி குழந்தை உறங்கிவிடுகிறது... தொட்டிலோ தூளியோ ஆட்டும் தாயும், தானும் இசையில் லயித்து களைப்புத்-தோன்றாது விழித்திருந்து ஆட்டமுடிகிறது. பக்தி-அஞ்சலி :-- இறைவனைத் துதிக்கையிலே சங்கீதத்தோடு இசைத்துப் போற்றி வேண்டினால், இறைவனும் நமது பிரார்த்தனைக்கு எளிதில் செவிசாய்க்கிறான் எனும் உண்மையை சான்றோர் பலர் தமது அனுபவத்திலும் கண்டறிந்து... அத்தகைய விந்தையான அனுபவங்களை நமக்கு எடுத்துக்-காட்டியதையும் காண்கிறோம்.... அத்தகைய சீரிய சக்தியும் சிறப்பும் சங்கீதத்திற்கு உள்ளன.

மேலும் ஒவ்வொரு ராகத்துக்கும் வெவ்வேறு குணம் உண்டு. அதாவது... மகிழ்ச்சி, சோகம், கோபம் ஆனந்தம், வீரம், இரக்கம் போன்ற நவரச-உணர்வுகளைச் சுட்டுவன. பக்தி-ஆழம் காட்டுவன. மழை-பொழியச் செய்வது... ஜோதியை விளக்கில் ஏற்றுவிப்பது இன்ன பிற.
உதாரணமாக வடநாட்டு சங்கீதத்திலே "தீபக்" எனும் ராகத்தைப்-பாடியே அக்பர்-சக்கரவர்த்தி முன்னிலையிலே விளக்கில் ஜோதியை ஏற்றிக் காட்டினானாம் தான்சேன் எனும் இசைஞானி...
அதேபோல தென்னாட்டு சங்கீதத்திலும் கூட, "ஜோதி-ஸ்வரூபிணி" எனும் ராகத்தை ஆழ்ந்து பாடி... பல்வேறு இசை-வல்லுனர்களும் மன்னர்கள்-சபை-முன்னே விளக்கேற்றிக்-காட்டியதாக வரலாறு கூறுகிறது.

சங்கீத-மும்மூர்த்திகளில் ஒருவரான தீக்ஷதர்... ஊர் ஊராக க்ஷேத்திராடனம் (பல ஊர்க்-கோயில்களில் தெய்வ-தரிசன யாத்திரை) சென்றபோது.தென்-தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தின்-வழியே செல்ல-நேர்ந்தது. கடும் கோடைகாலம்... அங்கு ஆறு ஆண்டுகளாக மழையே பெய்யாததால் பஞ்சம் தலை-விரித்தாடியதைக் கண்டு மனம்-நொந்து வெதும்பினார்...

உடனே .உச்சிவெய்யிலில் நின்று, வானத்தைப்-பார்த்துக்-கண்ணீர்-விட்டு அழுதுகொண்டே பாடினார்."அமிர்தவர்ஷிணி" ராகத்திலே... "ஆனந்தாம்ருதாகர்ஷிணி அம்ருதவர்ஷிணி... சலிலம் வர்ஷய, வர்ஷய வர்ஷய ..." என்ற கீர்த்தனை.

இதன் பொருள்.. "கருணையே வடிவான ஹே அம்பா துர்க்கா-தேவி, ஆனந்தம் மட்டுமே எப்போதும் மக்களுக்கு வழங்கும்-பண்புகொண்ட நீயே இவ்வாறு பேதையரை வருத்திச்-சோதிப்பது உனக்கு அழகா தாயே!... தயை-கூர்ந்து உடனேயே, இக்கணமே .... மழை பொழியடும்.... பொழியட்டும்.... பொழியட்டும்..."

அவர் பாடிமுடித்த உடனேயே வானம் விரைந்து கருத்து... பெரும் மழை பொழியத்-தொடங்கி ஒன்பது நாட்கள் இரவு பகலாகக் கொட்டோ-கொட்டு என்று கொட்டி, அந்தச் சுற்றுவட்டாரக் குளங்கள், ஏரிகள், குட்டைகள் போன்ற நீர்நிலைகள் யாவுமே நிரம்பிவிட்டதைக் கண்டவர்கள் கூறக்-கேட்ட பாண்டிய-மன்னன் நன்றிக்-கடன் உணர்வு மிக, தீக்ஷ¢தரைத் தனது சபைக்கு மிக்க பணிவுடன்-அழைத்து அவருக்குத் தக்க மரியாதை செய்வித்ததோடு இந்த விந்தை-பற்றிச் செப்பேட்டிலும் எழுதி-வைத்துள்ளார்.

ஆம்... மழையைத்-தருவித்த அந்த ராகம்... "அம்ருதவ்ர்ஷிணி."

பக்தியால் மட்டுமே தெய்வத்தின் அருளைப் பெற முடியும் என்றால், சங்கீதத்தோடு இணைத்து அவர் ஏன் பாடினார்?... அங்கு தான் சங்கீதத்தின் மகத்துவம் புலப்படுகிறது .ஆக்யினால் பாரம்பரிய இசைக்கும் என்றும் உயர்வு உண்டு மீதம் இசைகலை.

1 comments:

said...

அருமையான கட்டுரை.எனக்கு நம் பாரம்பர்ய இசை நன்கு பிடிக்கும்;அதிலும் நாதஸ்வரம் மிகப் பிடிக்கும்.இந்த அமிர்தவாகினி...யி.என்.B பாடக்கேட்டுள்ளேன். இன்றே பொருள் அறிந்தேன். இந்தச் சிக்கல் பெரும் சிக்கல் என் போன்றோருக்கு...எல்லாக் கீர்த்தனங்களுக்கும் பொருள் தெரிவதில்லை.
மனநிறைவு தரும் நம் இசையை ,வளர் சமுதாயமும் பயன் பெறவேண்டுமென்பதே என் அவா!
நான் நாதஸ்வரம் பற்றி எழுதிய கட்டுரையை இதில்http://koodal1.blogspot.com/2006/03/156.html படிக்கலாம்.