ஒளவையாரின் இலக்கிய இன்பம்

ஒருமுறை ஒளவையாருக்கு ஒரு கறவை ஆடு தேவைப்பட்டது. அதனை வாங்கிவர ஒரு சிற்றூருக்கு சென்றார். அங்கே வாதகோன் என்ற இடையனைக் கண்டார். அவனிடம் தனக்கு ஒரு ஆடு வேண்டும் என்று கேட்டார். "நாளைக்கு வா" என்று சாக்கு போக்கு சொன்னான்.

சரியென அங்கிருந்து புறப்பட்டு இன்னொரு இடையனைக் கண்டு பேசினார். அவன் பெயர் வையகோன். அவனிடம் தனக்கு ஒரு ஆடு விலலக்கு தரமுடியுமா என்று கேட்டார். அவனோ "பின்னே வா"(பிறகு வா) என்று சொல்லிவிட்டு மரத்தடியில் உறங்குவதற்காக சென்று விட்டான்.

அப்படியும் மனம் தளராத ஒளவையார் இன்னொருவரிடம் முயற்சி செய்வோமே என்று எண்ணி தள்ளாத வயதிலும் கடும் வெயிலில் பக்கத்துக்கு ஊருக்கு சென்றார். அங்கே ஒரு இடையனைக் கண்டார். அவன் பெயர் யாதகோன். அவனிடம் ஒரு ஆட்டினை கேட்டார். அவனோ தன்னிடம் ஆடு இருந்தும் கொடுக்க மனமில்லாமல் "என்னிடம் இல்லை போ" என்று சொல்லி அவரை விரட்டினான். 'பரவாயில்லை நன்றியப்பா' என்று சொல்லிவிட்டு தன் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தார்.

மனம் கவலைப்பட்ட அவர் எடுத்தார் தன் எழுதுகோலை. எழுதினார் கீழ்க்கண்டவாறு:-

வாதகோன் நாளை என்றான்
வையகோன் பின்னே என்றான்
யாதகோன் யாதெனும் இல்லை என்றான்.
ஓதக்கேள்,
வாதகோன் நாளையிலும்
வையகோன் பின்னேயிலும்
யாதகோன் யாதெனும் இல்லை என்று
உரைத்ததே இனிது.


ஒருவர் ஒருபொருளை நாளை தருவதாகக் கூறினாலும் அல்லது பின்னே தருகிறேன் என்று சொன்னாலும் அது துன்பம் தரத்தக்கதே. ஒருவர் தர மனமில்லாமல் "என்னிடம் இல்லை" எனக் கூறும் ஒரு வார்த்தை பிறரை அலைக்கழிக்காமல் அவருக்கு ஒருவகையில் நன்மை செய்வதற்கு ஒப்பாகும். இதுபோன்று யாதகோனில் இல்லை என்ற வார்த்தை இனிதாகப் பட்டது ஒளவையாருக்கு!

மேலும் படிக்க

3 comments:

Anonymous said...

அருமையான பாடல்.

Anonymous said...

இலக்கிய வளம்.

said...

arumai yaana pathivu