பாரம்பரிய மருத்துவம் பலனளிக்கும்! - டாக்டர் பெருமாள்

நம் அன்றாட வாழ்க்கையில் அதை தானே செய்கிறோம்? ஒரு தலைவலி வந்தால் முதலில் வென்னீரோ, காப்பியோ, சுக்கு காப்பியோ நெற்றியில் பற்றோ இடுகிறோமே? தற்போது காலம் நவீன மயமாகிவிட்டதால் நாகரீகம் கருதி மாத்திரைகளுக்கு அடிமையாகி அதற்கு பலியாகிறோம். பழையவை கிளாசிக்கல் போன்றது. எப்பொழுதும், புதியமுறை இல்லாமல் போனாலும் பயனளிக்க கூடியது.

அக்காலத்தில் தமிழ் மருத்துவர்கள் தேக தத்துவ நூல், நோயைப் பற்றிய நூல், நோயணுகாவிதி, இரணமருத்துவம், உணவுப் பொருள் மருத்துவ நூல், விஷங்களை நீக்கும் நஞ்சுநூல், ஞானசர நூல், சோதிட நூல் முதலிய பல நூல்களைக் கற்றறிய வேண்டியதோடு ஆசிரியனோடு 12 ஆண்டு பழக வேண்டும். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல்தான் தனியே மருத்துவம் செய்ய வேண்டும் என விதியிருந்தது. இப்போது அப்படிச் செய்கிற தமிழ் மருத்துவரும் இல்லை; செய்விக்கிற திட்டங்களும் இல்லை. மருத்துவத்துறையிலும் வெளிநாட்டு மருத்துவ முறைகளுக்கே ஆக்கமும் விளம்பரமும் மிகுந்துவிட்டன.அவ்வளவு தான்.

பாரம்பரிய பழைய நாள் மருத்துவர்கள் பகல் இரவு சூரிய சந்திர நட்சத்திரங்களைப் பாராமலும், கடிகாரம் எனும் காலங்காட்டியைப் பாராமலும், இருக்கும் இடத்திலிருந்து மூக்கு முனையில் நடைபெறும் மூச்சைப் பார்த்தே இரவு பகல் மணி சொல்லுவார்கள்; எனது பாட்டனாரிடத்திலும் தந்தையிடத்திலும் இவ்வரிய செயலை நேரில் பார்த்தேன். இச்சரப் பயிற்சியால் தன்னிடம் வரும் நோயாளிக்கு நோய் தீரும் தீராதெனவும், பிழைப்பான் பிழைக்க மாட்டானெனவும் கூறினார்கள். நோயாளியை வந்து பார்க்கும் படி மருத்துவமனை அழைக்கவரும் ஆண், பெண்களையும், அவர்கள் வந்து நிற்கும் திசைகளையும், அவர்கள் வாயிலிருந்து வரும் முதற் சொல்லையும், அச்சமயம் மருத்துவனுக்கு மூக்கில் நடக்கும் சரத்தையும் கண்டு நோயாளியின் நிலைமைத் தெரிந்துகொள்வார்கள். முற்காலத்தில் மருத்துவர்களும் பெரு மக்களில் பலரும் வீட்டைவிட்டு வெளியே புறப்படும்போது மூக்கில் விரல் வைத்துச் சாரத்தைப் பாராமல் புறப்படமாட்டார்கள். நீரில் தலைமுழுகு முன்னும் உணவு உட்கொள்ளு முன்னும் வலப்பக்கம் நாசியில் சுவாசம் (சூரியனில்) நடைபெறுகிறதா என்பதைக் கவனிப்பார்கள். சோதிடமும் பார்ப்பார்கள். வானத்திலுள்ள நவக்கிரகங்களின் உச்சநிலையைப் பற்றிக் கவனித்துச் சூரியனைக் காலை மாலை கண்ணால் பார்ப்பது போல் சந்திரனையும் இரவில் பார்ப்பார்கள். நோயாளியின் ஜாதகத்தையும் பார்ப்பார்கள். இவைகளை எல்லாம் பார்த்து மருத்துவம் செய்வதுதான் இயற்கை மருத்துவம். அதில்தான் பயன் மிகுதி. தமிழ் மருத்துவம் அப்படிப்பட்டது. கிரகமெனும் ஞாயிறு மறைவு மதிமறைவு நேரத்தில் உண்ணாமல் ஓர் அலுவலும் பண்ணாமல் தனித்திருந்து பேசாமல் தியானம் செய்யும்படி தமிழ் மருத்துவ நூல்கள் கூறுகின்றன. அந்நேரத்து ஒளியில் பலவகைக்கெடுதல் இருப்பதே அதற்குக் காரணம்.

உலோகங்களைச் செந்தூர பஸ்மங்களாகச் செய்கிற பழக்கத்தால் செம்பை வெள்ளியாகவோ பொன்னாகவோ செய்யும் இரசவாத வித்தையும் பழைய தமிழ் மருத்துவர்களுக்குத் தெரிந்திருந்தது. அதனால் அவர்கள் இக்காலம் போல் பெரும்பாலும் பணத்துக்காக மருத்துவம் செய்யாமல், ஏழை எளியவர்களுக்கு இலவசமாகவே மருத்துவம் செய்வார்கள். மருத்துவர்கள் பிணியாளர்களைப் பார்க்கும்போது வெறுந்தரையிலிருந்து நோயாளரைத் தொட்டுப் பார்ப்பதால் நிலக் கவர்ச்சியால் மருத்துவனுடைய தேக காந்த சக்தி நோயாளிக்கும் நோயாளியின் தேக காந்த சக்தி மருத்துவனுக்கும் பரவுகிறதென்பதை அறிந்து, தற்காப்புக்காக நோயாளியைப் பார்க்கும்போது வேறொன்றிலும் அமராமல் மரப்பலகை (மணை) மீது அமர்ந்துதான் பார்ப்பார்கள்.

நோயாளியை வெறுங்கையால் தொட்டுப் பார்க்காமல் தனது கைக்கும் நோயாளி உடம்புக்கும் நடுவில் மெல்லிய பட்டுத்துணியைப் பிரித்துப் போட்டுப் பார்ப்பார்கள். மரப் பலகைக்கும் பட்டுத்துணிக்கும் நிலக்கவர்ச்சியைத் தடுக்கும் ஆற்றல் இருக்கிறதென்பதை நம் முன்னோர்கள் அக்காலத்திலேயே கண்டிருந்தார்கள். இன்றும் வயதானவர் பலருக்கும் கிராமங்களில் வாழ்பவர் சிலருக்கும் இது தெரியும். இன்று மின்சாரத்தில் வேலை செய்கிறவர்களிடம் இதைக் காண்கிறோம். பாரம்பர்ய பழைய தமிழ் மருத்துவர்கள் நோயாளரைச் சோதித்தறியும்போது நோய்வந்ததற்குக் காரணத்தை முதலில் காண்பார்கள். பலதரப்பட்ட மக்களுக்கு அவரவர் நிலத்தியல்பு, உணவு, கல்வி, அறிவு, செய்தொழில் ஆகியவற்றைக் கவனித்தும்,

"நாடியால் முன்னோர் சொன்ன நல்லொலி பரிசத்தாலும்
நீடிய விழியினாலும் நின்ற நாக்குறிப்பினாலும்
வாடிய மேனியாலும் மலமொடு நீரினாலும்
சூடிய வியாதிதன்னைச் சுகமுடன் அறிந்துபாரே"


என்றபடி மருத்துவத்தில் கைநாடி, குரலொலி, உடற்சூடறியத் தொடுதல், கண், நாக்கு, உடம்பின் நிறம், நீர், மலம் இந்த எட்டுவிதச் சோதனையின்றி மருந்து கொடுக்கமாட்டார்கள்.

சில நோயாளிகளுக்கும், பல மருந்துண்டு அலுத்தவர்கட்கும் இயற்கை மருத்துவம் செய்வார்கள்; பத்தியம் எனக்கூறி உணவை மாற்றுவார்கள். உள்ளப் பிணியாளர்களை, மனநோயாளர்களை, இருக்கும் இடத்தை விட்டு 'ஸ்தல யாத்திரை' போகச் சொல்வார்கள். சில நோய்களுக்கு உடம்பில் சில இடங்களில் சுட்டும், அறுக்க வேண்டிய இடங்களை அறுத்தும், பழைய நாட்களில் மருத்துவம் செய்துள்ளார்கள்

இக்காலத்தைப்போல் இவ்வளவு அறுவை மருத்துவங்கள் அக்காலத்தில் இல்லை. இத்தகைய நோய்களும் அக்காலத்தில் இல்லை. இவ்வளவு பெரிய மருத்துவமனைகளும் அக்காலத்தில் இல்லை. எத்தனை ஆஸ்பத்திரிகள் கட்டினாலும் இப்போது நோயாளிகளுக்கு இடம் போதவில்லை என்கிறார்கள். இதற்கு, நாள்தோறும் மக்களுக்கு நோய் அதிகப்படுவதே காரணமாகும்.

இதற்க்கு காரனம் தற்போது மருந்துகலாலே வியாதி அதிகம் சம்பவிப்பாதக அதிக தகவல் ஆகவே பாரம்பர்ய மருத்துவமெ சிறந்தது ஏன்ன்றால் வருமுன் காகும் திறன் இருந்தாது. இச்சூழலிலும் பாரம்பர்ய மருத்துவம் பயனளிக்கும்!

மேலும்: படிக்க

0 comments: