இந்து என்று ஒரு மதமே கிடையாது! - சிவசேவகன்

1. உள்ளங்கவர் கள்வன் (By கி.வா.ஜகன்னாதன்)

"இந்துமதம் என்ற இக்காலத்தில் வழங்கும் பெயர் பலசமயங்களுக்கும் பொதுவானது. அப்படி ஒரு தனிச் சமயம் இல்லை. ஆனாலும் சைவம் வைணவம் முதலிய சமயங்கள் பலவற்றிற்குப் பொதுவாக அந்தப் பெயர் அயல் நாட்டவரால் வழங்கப் பெற்று நாளடைவில் நாமும் வழங்கும்படியாயிற்று"

2. காங்கிரஸ் 15-7-1956 (ஜுன் வெளிவந்த பிலிம் இண்டியாத் தமிழாக்கம்) "ஆங்கிலச் சரித்திரப் பேராசிரியர்கள் தான் முகலாயர்கள் இந்தியருக்கு கொடுத்து வந்த 'இந்து' என்ற பெயரை எடுத்துக் கொண்டு மேலும் மேலும் அழுத்தமாக வற்புறுத்தி ........ பிரிவினையை ஏற்படுத்துவதற்குக் காரண கர்த்தர்க்களாக இருந்தார்கள். முகலாயர்கள் இந்தியாவைப் படையெடுப்பதற்கு முன்பு ஹிந்துக்கள் என்ற பெயரே கிடையாது"

3. பிரம வித்தியா பத்திரிகை (புத்தகம் 4, இலக்கம் 14, பக்கம் 201, 202.) பக்கம் -201 "ஹிந்து என்னுஞ் சொல் புதியதே. இதைச் சிலபாஷாகவிகள் உபயோகிக்கின்றனர். சில நவீனர் இது மகமதியரிட்ட பெயரென்றும் மற்றவர் யவணர் ஸிந்து நதிக்கரையில் வசிப்பவராதலின் ஹிந்துக்களெனப் பெயரிட்டா ரென்றும் வேறு சார்பினர் இ·தறிஞர் பெயரென்றும் பிறர் ஓர்வகைச் சித்தாந்திகள் பெயரென்றும் மற்றவர் ஒதுக்கப் பட்டவர் பெயரென்றும் சிலர் பிரஷ்டர் பெயரென்றும் பலவழி சொல்லுகிறார்கள்." "இச் சொல் மகமதியர் விசேஷமாய் நெடுங்காலமாய் வியவகரிப்பதாய் ஆரட்ட பாஷை (அதாவது அரபிபாஷை). அதில் ஹிந்து என்று (அஞ்ஞானி என்னும் பொருளில்) இருக்கின்றது. அவர்கள் இந்த இந்தியா தேசத்தின் ஆக்ஷ¢யைக் கைக்கொண்ட பொழுது நம்மவர் ஞானிகளாகவும் மற்றவர் அஞ்ஞானிகளாகவும் எண்ணி இப்பெயரை இட்டார் என்பது."

4. தினமணி 10-3-1958 "ஹிந்தி என்ற வார்த்தையே இந்தியச் சொல் அல்ல என்று ராஜாஜி இங்கு தமிழர் அளித்த வரவேற்பில் பேசுகையில் கூறினார். பூர்வீக பாரசீகர் இந்தியாவுக்கு வந்தபோது இந்தியாவின் பூர்வீக குடிகள் பேசிய மொழிக்கு ஹிந்தி என்று பெயரிட்டனர் என்று அவர் விளக்கினார்"

5. R.K.முகர்ஜி என்பவர் சென்னைக் கோகலே ஹாலில் 27.09.1941ல் நடந்த கூட்டமொன்றில் பிரசங்கித்தது. "India and Hinduism are Organically related like body and soul. The name HINDUISM was given to them by Persians"

6. படுக்கை யறையில் பாசாங்கு செய்த பங்கஜவல்லியின் கதை "கிறிஸ்து பிறந்த 1191 வது வருஷத்திலே சகாபுடீன் கோரி என்னப்பட்ட மகமதிய அரசன் டில்லி இராஜ்யத்தை ஜயித்து மகமதிய அரசை நிலைபெறச் செய்த போது இந்நாட்டவர்களாகிய ஆரியரை இந்துக்களென்று அழைக்கத் தொடங்கினர்.......இதனை இத்தேச புராதன சரித்திரமாகிய 'பாரத் பாகி' என்னப்பட்ட நூலிற் காணலாம்."

மேலும் படிக்க:- http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&file=viewtopic&t=3558

6 comments:

Anonymous said...

நல்ல பதிவு சார்.

said...

முத்தமிழ்... நாரதரின் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள். தொடருங்கள் உங்கள் பயணத்தை.

தாங்கள் கூறியிருப்பது உண்மைதான். இந்தியாவில் பௌத்தம், சைவம், வைனவம், ஜைனம் என பல பிரிவுகளைக் கொண்ட மதங்கள் தனித்தனியாகத்தான் இயங்கிக் கொண்டு வந்தது. 1911இல் பிரிட்டிஷ் கணக்கெடுப்பிற்கு பின்தான் யார் இந்து என்ற கேள்விக்கு? யாரெல்லாம் இசுலாமியர்கள், கிறித்துவர்கள் இல்லையோ அவர்கள் எல்லாம் இந்துக்கள் என்று வரையரை செய்துவிட்டனர். இந்த சாபக்கோடுதான் இன்றைக்கு இந்துக்கள் ஏதோ பெரும்பான்மையாக இருப்பதுபோல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

மேலும் இந்தியாவே பல தேசங்களைக் கொண்ட ஒரு தேசம்தான். இது பிரிட்டிஷ் வருகையால் ஏற்படுத்தப்பட்ட ஒற்றுமை. பிரிட்டிஷாரை எதிர்த்து நம்முடைய மக்கள் நடத்திய ஒன்றுபட்ட போராட்டத்தின் விளைவால் உருவானதே இந்த இந்திய நாடு. ஆரம்பகாலத்தில் இதனை சிந்து மக்கள் என்று அழைக்கப்பட்டது. இதுவே மருவி இந்துவானது.

வாழ்த்துக்கள்....

said...

அரபி மொழியில் ஹிந்து என்றால் அழகு என பொருள்படும். பாலைவனத்து மக்கள் இந்திய நாட்டின் அழகைக் கண்டு ஹிந்தி என அழைக்க ஆரம்பித்தனர்.

இன்றும் அவ்வாரே இந்தியர்களைக் கண்டு ஹிந்தி என அழைப்பார்கள். இதில் முஸ்லிம், இந்து, கிருத்துவர்கள் அனைவரும் அடங்கும்.

said...

வாங்க சந்திப்பு அவர்களே!

அருமையான கருத்துகளை சொல்லியிருக்கீங்க, நன்றி.

said...

வாங்க அப்துல் குத்தூஸ் அவர்களே!

ஆமாம், ஹிந்தி என்று அரபிக்காரர்கள் அழைத்தால் அது இந்தியர்கள் அனைவரையும் ஒன்றாக குறிக்கும்.

ஹிந்தி என்றால் அழகு என்று சொன்ன பின்பு மகிழ்ச்சியாக இருக்குது, என்னை ஒருவர் அடிக்கடி ஹிந்தி ஹிந்தி என்பார் :)

Anonymous said...

//தினமணி 10-3-1958 "ஹிந்தி என்ற வார்த்தையே இந்தியச் சொல் அல்ல என்று ராஜாஜி இங்கு தமிழர் அளித்த வரவேற்பில் பேசுகையில் கூறினார். பூர்வீக பாரசீகர் இந்தியாவுக்கு வந்தபோது இந்தியாவின் பூர்வீக குடிகள் பேசிய மொழிக்கு ஹிந்தி என்று பெயரிட்டனர் என்று அவர் விளக்கினார்"//

அப்படியா அப்ப எந்த மாநிலத்தில் வாழும் மக்களுக்கு ஹிந்தி தாய்மொழி...