இடதுகை பழக்கம் - மூர்த்தி

இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் பற்றி அண்மையில் கலிபோர்னியா பல்கலைக்கழகத் தில் ஒரு சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வேயை நடத்திய பேராசிரியர் ஸ்டான்லி கோரன், இடது கைப் பழக்கம் உள்ள நூற்றுக் கணக்கானவர்களைச் சந்தித்தார். இடது கைப் பழக்கம் கொண்ட இறந்தவர்கள் பற்றியும் ஆராய்ந்தார். இவரது ஆராய்ச்சியின்படி இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு சில குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் வலது கைப் பழக்கம் கொண்ட வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து வாழும்போது மிகவும் சிரமப்படுகிறார்களாம். தவிர, வலது கைப் பழக்கம் கொண்டவர்களை விட இவர்களுக்கு சராசரியாக 9 வருடம் ஆயுள் குறைவாக இருப்பதையும் கண்டறிந்தார்.

இதற்கு முக்கியக்காரணம் இவர்கள் அதிக அளவில் விபத்துக்களில் சிக்கிக் கொள்வதுதான். ஏனெனில் உலகம் முழுவதும் வலதுகை பழக்கம் கொண்டவர்களுக் காகவே எந்திரங்கள், தொழில் உபகரணங்கள், வாகனங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதால் அதை இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் கையாளும்போது அவர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

ஒரே ஆறுதலான விஷயம், இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் இக்கட்டான சூழ்நிலை யிலும் சட்டென்று திடமான முடிவுகளை எடுப்பதுதான். வலது கைப் பழக்கம் உள்ளவர்கள் இது போன்ற நேரங்களில் தடுமாறி விடுகிறார்களாம்.

3 comments:

said...

அப்படியா? நானும் இடது கை பழக்கம் உள்ளவன் தான்.

said...

//இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் இக்கட்டான சூழ்நிலை யிலும் சட்டென்று திடமான முடிவுகளை எடுப்பதுதான்//

வாஸ்தவம்தான்.

ஹி.ஹி.நானும் இடது கைப் பழக்கம் உடையவன்தான்.

said...

//ஒரே ஆறுதலான விஷயம், இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் இக்கட்டான சூழ்நிலை யிலும் சட்டென்று திடமான முடிவுகளை எடுப்பதுதான். வலது கைப் பழக்கம் உள்ளவர்கள் இது போன்ற நேரங்களில் தடுமாறி விடுகிறார்களாம்//

ஜார்ஜ் புஷ்
நெப்போலியன் போனபார்ட்
ஜூலியஸ் சீசர்
முக்கியமாக, ஒசாமா பின்லேடன்
நம்ம, பில் கேட்ஸ்

இவர்கள் எல்லாம் இடது கை பழக்கம் உள்ளவர்கள்....

மங்கை