படித்ததில் பிடித்தது - ரத்தினகிரி

பிள்ளையார் சுழியைப் பற்றி ஒவ்வொருவரிடமும் கேட்ட போது:

நர்சரிக் குழந்தை: அம்மா போடச் சொன்னாங்க, போடலைன்னா சாமி அடிக்கும். போட்டா சாமி காப்பாத்தும்.

பள்ளி மாணவன்: சாமி கும்பிட்டு ஆரம்பித்தால் நல்லது. அதான்.

சாதாரண மக்கள்: ரொம்ப வருடம் பழகி விட்டது.

நாத்திகர்: அந்தக் காலத்தில் எழுத்தாணி அல்லது தொட்டு எழுதும் பேனா சரியாக எழுதுகின்றதா என்று சோதிப்பதற்காக ஒரு சிறு கீற்று. அதை இந்த மடமக்கள் பிள்ளையார், அது இது என்று காதில் பூச்சுற்ற ஆரம்பித்து விட்டனர்.

ஆன்மீகத்தினர்: கணபதி அனைத்திற்கும் ஆரம்பம். விக்னம் தீர்க்கும் விநாயகர் தான் ஆரம்பிக்கும் இச்செயல் விக்னமின்றி முழுமை பெற வழிபடும் முகமாகவே இக்குறியீடு. ஓம் என்ற பிரணவமே விநாயகர். அதன் திரிபு தான் உ என்ற எழுத்து.

அறிவியல் ஆன்மீகம்: உ என்ற வார்த்தை பூஜ்ஜியமும், நேர்கோடும் சேர்ந்த அமைப்பு. பூஜ்யம் என்பது ஆதியும் அந்தமும் இல்லாத பாரதம் கண்டுபிடித்த உயரிய அமைப்பு. அண்டமும் வட்டம் தானே! அது சுழலும் பாதையும் வட்டம் தானே. ஆதலின் சர்வ வியாபகம் உடைய சர்வ வல்லமையுடைய ஆதி அந்தமில்லா இறைவனை ஒரு சிறு வட்டத்தினைக் குறிப்பதன் மூலம் உணர்ந்து வழிபடுகிறோம்.

மின் உற்பத்தி செய்யும் டைனமோ அமைப்பில், காந்தத்தின் சுழற்சியில் மின்சக்தி வெளிப்படும். அணுவின் சுழற்சியில் சக்தியின் வெளிப்பாடும் இது போல் தான். சக்தியின் வெளிப்பாடு, நேர் கோட்டிலே தான் இருக்கும்.

எல்லாவற்றிற்கும் மேல் உள்ள பரம்பொருளை பூஜ்யமாகவும், அதிலிருந்து வெளிப்படும் சக்தியை நேர்கோடாகவும் எழுதுவதே உ ஆகும். இந்த உலகத் தத்துவத்தை ஒரு எழுத்தில் உணர்த்துவது ஆன்மீகம்.

நன்றாகப் பாருங்கள், ஆயிரம்,லட்சம், கோடி தவிர அனைத்து தமிழ் எண்களும் உ வில் தான் முடிவுறும்!

------------------------------------------------------------------------------------
இவ்வாறு பல விஷயங்களைப் பற்றி சிவகாசியிலிருக்கும் மற்றொரு மருத்துவர் (எஸ். எஸ். பி போல்) பாலசுப்பிரமணியன் அவர்கள் குருகுலத்தில் ஒரு தொடர் எழுதியிருக்கிறார். அதிலிருந்து படித்ததில் பிடித்தது உங்களுக்காக.

மேலும் படிக்க தருகை தாங்க: http://www.muthamilmantram.com

1 comments:

Anonymous said...

ரத்தினகிரியாரின் தாஸன்
ஆகிவிடுவேன் என்று நினைக்கிறேன்.அவரின் கைவண்ணம் எல்லா இடங்களிலும் காண்கிறேன்.அவருக்கு இணையாக எழுதும் ஆற்றல்
படைத்த மன்னைகோசையார் , ரத்தினகிரியாரின் மர்பி விதிகளை படித்துவிட்டு, சிவபெருமானின் பாடலைக் கேட்ட ஏமநாத பாகவதரைப்போல எங்காவது ஓடிவிட்டாரா? நான்கு நாட்களாக மன்னைகோசையார் மன்றத்திற்கு எந்த மடலும் வரையவில்லையே.

ARS மணியன்.