1.
' ஓவர் ஸ்டேயில் இருந்த
வீரமுத்து மவன் பாண்டியனுக்கு ரோத்தான் அடி
பாளம் பாளமா இறங்கியிருக்குதாம்....
பய குளிக்கையில்கூட சட்டையைக் களட்டுறதில்லையாம்....
என்ன செய்ய என்னய்யனுக்கு அஞ்சு
போண்ணாச்சு கல்யாணம் காத்தி,
புள்ள பொறவு பாக்கணுமில்லே....
வயல்ல பம்பு செட்டு மாத்தணும்;
வீடு பழுதுபாக்கணும்
போனது லீவுக்குப் போனது
பொட்டையாப் போச்சு.
பத்து வெள்ளினாலும்
ஊர்ப் பணத்துல இருநூத்தம்பது.......
பயலையாவது பெருமாக் கோயில்ல
கூடுற பட்டணத்து பயலுவ மாதிரி
கம்பூட்டர் படிக்க வைக்கோணும்.
2.
ஆருடம் சொன்னவனை நம்பி
அனைத்தையும்
அடகு வைத்து இங்கு வந்து
சேர்ந்தவனுக்கு
ரோடில்
தார் போடும் வேலை....
**சிங்கப்பூர் தமிழன் ஒருவனைப் பற்றிய ஒரு கவிதை..........
3.
அன்றொரு நாள்
ஹாய் சொன்னவனுக்கு
கழுத்து நீட்டினாள்
...........................
...........................
இப்போதும் இவள்
தேடுவது
அன்றொரு நாள்
ஹாய் சொன்ன
அவனை.....
** சுஜாதா அவர்களின் கற்றதும் பெற்றதும் புத்தகத்திலிருந்து...........
_________________
சிங்கப்பூர் கவிதையிலிருந்து.... பட்டினத்தார்
Labels: கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
//தார் போடும் வேலை//
உண்மை சம்பவம்.
Post a Comment