1893ம் ஆண்டிலே அவதரித்து 1994ம் ஆண்டிலே முக்தியடைந்த காஞ்சி மஹா பெரியவர் உலகத் தலைவர்களும், பிற மதத் தலைவர்களும் மதித்த ஒரு உத்தமமான ஜீவன்.
ஒரு முறை காஞ்சி மடத்தில், நீதியரசர் மு.மு.இஸ்மாயில் அவர்கள் மஹா பெரியவரை தரிசித்த பொழுது, மஹா பெரியவர் நீங்கள் ஐந்து முறை தொழுகை செய்கிறீர்களா? என வினவினாராம்.
இஸ்மாயில் அவர்கள் தான் நான்கு முறை மட்டுமே தொழுவதாகக் கூறினார்.
ஐந்து முறை தொழுவது உண்டல்லவா? என மஹா பெரியவர் கேட்டாராம்.
இஸ்மாயில் அவர்கள், ஆமாம் உண்டு. அர்த்தசாமம் எனும் நடுநிசியில் ஒரு முறைத் தொழவேண்டும். சிலர் மட்டுமே இதைச் செய்கிறார்கள்.
இதைக் கேட்ட மஹா பெரியவர்கள், உற்க்கத்தில் கூட இறை உணர்வு வரவேண்டும் என மனிதனை பண் படுத்திய வழிபாடுகள் உண்மையாய் கடைபிடிக்கப்பட்டால், சண்டை சச்சரவுகளே வாராது அல்லவா எனக் கேட்டு, நீங்களாவது ஐந்து முறை தொழுகை செய்யுங்கள் என்று கூறினாராம்.
*-*-*-*-*-*-*
ஒரு முறை தொழிலதிபர் பிர்லா அவர்கள், மஹாபெரியவர்களை தரிசிக்க வந்தார். வரும் பொழுது பல தட்டுக்களில் பழங்களை வைத்து கொண்டு வந்தார். அதில் ஒரு தட்டில் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளும் வைத்திருந்தார்.
தரிசனம் முடிந்து, பிர்லா கிளம்பு பொழுது, பெரியவர் தட்டில் என்ன வைத்திருக்கிறாய் எனக் கேட்டாராம். பிர்லாவும் காணிக்கை வைத்திருப்பதாகவும், இன்னும் பெரியவர் உத்தரவு பண்ணினால் காசோலையே தருவதாகக் கூறினார்.
இதைக் கேட்ட பெரியவர், ஒன்றும் இல்லாத எனக்கே நீங்கள் இவ்வளவு பணம் தருகிறீர்கள் என்றால், குடும்பத்தொடு அன்றாடம் போராடி வாழ்க்கை நடத்தும் மனுஷனுக்கு எவ்வளவு தேவைப்படும். ஆகவே இந்த பணத்தை நீங்களே எடுத்துக்கொண்டு கஷ்ட ஜீவனம் பண்ணும் எளியவர்களுக்கு கொடுத்து விடுங்கள் என்றாராம்.
வெளியே வந்த பிர்லா, தன்னுடன் வந்த நண்பரிடம் கூறினாராம் :- நான் பார்க்கும் பல ஆன்மீகவாதிகள் பணத்தை எப்படியெல்லாம் இரட்டிப்பாக்கலாம் என பல வழிகளில் பணம் சேர்க்கும் வேளையில், எதுவுமே தனக்கு வேண்டாம் என்று கூறும் மஹாபெரியவர் உண்மையிலேயே நடமாடும் தெய்வம் தான் என்றாராம்.
காஞ்சி மஹா பெரியவர் - நடமாடும் தெய்வம்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அத்வைத்தம் x சந்திரமௌலீஸ்வரர் பூஜை ---- இந்த முரண்பாட்டை கொஞ்சம் விளக்கினால் உமக்கு கோடிபுண்ணியம் சாரே.
அப்படியே இந்திராகாந்தியை ஏன் மாட்டுத் தொழுவத்தில் வைத்து சந்தித்தார்...
பெண்கள் வேலை
பால் மணம்..
இன்னும் பல கேள்விகளைக் கேட்கலாம்...
நல்லவன் என்பவனால் நாடு என்ன பயன் அடைந்தது....?
எதுவுமே வேண்டாம் என்பவர் ஏன்..தங்கக்காசுகளை தன் மேல் கொட்டி பூஜை செய்ய அனுமத்திதார்...?
:-((((
களஞ்சியம் என்ற அமைப்பின் மூலம் பல குடும்பங்களின் வாழ்வில் விளக்கேத்தி வைத்த ஒரு சராசரி கிழவியை நான் அறிவேன்.
அவர்கள்தான் போற்றப்பட வேண்டியவர்கள்.
இவர்கள் அல்ல
அதெல்லாம் சரி "தீண்டாமை ஷேமகரமானது" என்றாரே உங்கள் மகாப்பெரியவர்? தீண்டாமைத்தடுப்புச்சட்டத்தில் உள்ளே தள்ளவேண்டிய ஒரு கிரிமினல் உங்களுக்கு நடமாடும் தெய்வமா?
//அதெல்லாம் சரி "தீண்டாமை ஷேமகரமானது" என்றாரே உங்கள் மகாப்பெரியவர்? தீண்டாமைத்தடுப்புச்சட்டத்தில் உள்ளே தள்ளவேண்டிய ஒரு கிரிமினல் உங்களுக்கு நடமாடும் தெய்வமா?//
பதில் சொல்லுங்கள்.
Post a Comment