சிவாலயங்களில் செய்யத்தகாதன! - சிவசேவகன்

1. குளிக்காமல் ஆலயத்திற்குள் செல்லக் கூடாது!

2. மேல் வேட்டி, சட்டை முதலிய அணிந்து செல்லக் கூடாது!

3. சிரித்தல், சண்டையிடல், வீண் வார்த்தைகள் பேசல், உறங்கல் கூடாது!

4. சிவனார்க்கும், நந்தி தேவருக்கும் குறுக்கே செல்லுதல் கூடாது!

5. பலிபீடத்திற்கும், சன்னிதிக்கும் இடையே போதல் கூடாது!

6. அபிஷேகம் நடக்கும் போது உட் பிரகாரத்தில் வலம் வரல் கூடாது!

7. வழிபாட்டை அவசரமாக நிகழ்த்தல் கூடாது!

8. சுவாமிக்கு நேராக காலை நீட்டி வணங்கல் கூடாது!

9. ஈரமான ஆடை அணிந்து செல்லுதல் கூடாது, மயிர் கோதி முடித்தல் கூடாது!

10. பாதரட்சை, குடை முதலியன எடுத்துச் செல்ல கூடாது!

8 comments:

Anonymous said...

ஆறுமுக நாவலர் அவர்களின் சிவாலய தரிசன இயல்.

Anonymous said...

நல்ல தகவல்! தொடருங்கள் உங்கள் சிவபணியை. வாழ்த்துகள்!

>>> தமிழும் சைவமும் நம் இரு கண்கள் <<<

said...

நன்று சொன்னீர்கள்,
தொடரட்டும் உங்கள் பணி.

Anonymous said...

மேற்சட்டை அணியக்கூடாதென்பது; ஆறுமுக நாவலர் காலத்தில் சரியாக இருக்கலாம். இப்போ தேவையற்றது.காலத்துக்கேற்ற கருத்து;மாற்றம் நன்றே!!!!!!
தொற்றும் சரும வியாதிகள் பரவாதிருக்க ,நெருக்கடி நிறைந்த கோவில்களில்;உடலை மறைப்பது சுகாதார ரீதியில் சிறந்த தென்பது என் கருத்து.இதனால் இறைவனை எந்தவகையிலும் ;நாம் கேவலப் படுத்தவில்லை.
ஐரோப்பிய அமெரிக்க கோவில்களில் ;பூசகரே சட்டை போடவேண்டிய "குளிர்"
யோகன் பாரிஸ்

said...

முத்தமிழ் மன்றம் ஏன் வெகு நாட்களாக புதிய பதிவுகள் இல்லாமல் இருக்கிறது? மற்ற பதிவுகளில் எழுதுவதினால் இதற்கு மூர்த்திக்கு நேரம் இல்லாமல் போயிற்றோ

said...

நீங்கள் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு விதிமுறைக்கும் ஏன் அப்படிச் செய்யக் கூடாது என்ற விளக்கத்தைத் தயவு செய்து தர முடியுமா?
அறிய வேண்டும் எனும் ஆர்வத்தில் தான் கேட்கிறேன். எதிர் வாதத்திற்காக அல்ல.

மிக்க நன்றி

said...

முத்தமிழ் மன்றத்தில் நிறைய பண்டிதர்கள் இருக்கிறார்கள் நண்பரே. அங்கு வந்து சந்தேகம் கேட்டு தீர்வைப் பெறுங்களேன்.

said...

/* நிறைய பண்டிதர்கள் இருக்கிறார்கள் நண்பரே. அங்கு வந்து சந்தேகம் கேட்டு தீர்வைப் பெறுங்களேன். */

நல்லது. அப்படியே செய்கிறேன்.
மிக்க நன்றிகள்.