கீரைபக்கோடா- பரஞ்சோதி

தேவையான பொருட்கள்:-

கடலைப் பருப்பு - 1 1/2 கப், அரைக் கீரை - 1 கட்டு, புதினா - 1 கைப்பிடி, கறிவேப்பிலை -சிறிது, மல்லித்தழை -சிறிது, மிளகாய் வற்றல் - 2 பச்சை மிளகாய் - 2 ,சோம்பு - 1 டீஸ்பூன், இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 5 பல், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் தண்­ரில் ஊறவைத்து பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றைச் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைக் கீரை, மல்லி, புதினா, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்குங்கள். அரைத்த விழுதுடன் உப்பு கீரை வகைகளைச் சேர்த்துப் பிசையுங்கள். சிறிது சிறிதாக எடுத்து சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். சுடச்சுட சாப்பிட சுவையாக இருக்கும். தக்காளி சாஸ் தொட்டுக்கொண்டால் சுவை கூடும்.

2 comments:

rahini said...

samaiyal kuripu
m.. mika nallthee
ennum tharavum nalla thokuppukkal.
rahini

முத்தமிழ் said...

ராகினி அவர்களே,

இன்றுதான் உங்கள் வலைப்பதிவைப் படிக்கிறேன். அனைத்தும் அருமையாக உள்ளது. எப்படி இவ்வளவு வலைப்பதிவுகளை பராமரிக்கிறீர்கள்?

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.

முத்தமிழ்மன்றத்திற்கும் வருகை தாருங்கள்.

www.muthamilmantram.com